expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday, May 30, 2011

இருமல் , சளி COUGH AND COLD


 நோயாளியின் முறையீடு             
இருமல் , சளி , மூக்கில் சளி ஒழுகல் .
 நோயின் அறிகுறிகள்                  
மூக்டைத்தல் , தும்மல், மூக்கில் அரிப்பு    சளி வெளிப்படல், சுறுசுறுப்பின்மை, சுரம் மற்றும் உடல் வலி , .
நோய் குணங்கள்                             
மூக்கு சளி , கண்ணில் நீர் வடிதல் , சுரம்,
நோய் கணிப்பு                              
இருமல் , சளி ,
மருத்துவம் :- 
தயாரித்த மருந்து :- 
                         1. தாளிசாதி சூரண மாத்திரை இரண்டு தினம் இரு வேளை அல்லது மூன்று வேளை  வெந்நீரில் சாப்பிடவும் . 
                            2.  ஆடாதோடை மணப்பாகு ஐந்து முதல் பத்து மிலி வரை அரை தம்பளர் வெந்நீருடன் கலந்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிடலாம் . சுரமும் குறையும். 

கைப்பக்குவ  மருந்து :-
                                ஆடாதோடையின் ஐந்து இலைகளை எடுத்து நடு நரம்பை நீக்கி அத்துடன் பத்து மிளகு , ஒரு பிடி துளசி இலைகள் , இரண்டு வெற்றிலை ஆகியவைகளை ஒன்றிரண்டாக இடித்து 300 மிலி நீர் விட்டு மூடிய பாத்திரத்தில் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 75  மிலி ஆனவுடன் வடிகட்டி குடிக்கவும். இதை தினம்  இரு வேளை அல்லது மூன்று வேளை சாப்பிடலாம். 

தவிர்க்க வேண்டியவை  :-
                            குளிர்ந்த பொருட்கள், புளித்த தயிர் .

மருத்துவ அறிவுரைகள் :- 
                             மிளகு ரசம் அல்லது தூதுவேளை ரசம் சூடான சாதத்துடன் , ஆவிபிடித்தல் ( நொச்சி இலை போட்ட கொதிக்கும் நீரில் ) 

பிற காரணங்கள் :- 
  •    தொண்டை , மூக்கு , உள்நாக்கு , சுவாச பாதை , நுரையீரல் ஆகியவைகளில் ஏற்படும் தொற்று நோய்கள் , அழற்சிகள் .
  •   காச நோய் **
  •   ஆஸ்துமா நோய் **
  •   நிமோனியா **
  •   ஒவ்வா பொருட்கள் ( வீடு தூசி , தாவர மகரந்தம் , செல்ல பிராணிகளின் உரோமம், புகை , ஒற்றடை ) 
  • நுரையீரல் புற்று **      
                         **  டாக்டருடன் ஆலோசிக்கவேண்டும் .
                   
 

1 comments:

Sivamjothi said... Reply to comment

வள்ளலார் ஞான மூலிகை காலையில்

1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி
2 தூதுளையிலை
3 முசுமுசுக்கையிலை
4 சீரகம்
இவைகளின் சூரணம்(powder- avilable in all khadi stores)
நல்ல ஜலம்(water), பசுவின் பால் மற்றும் நாட்டு சர்க்கரை இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது

http://sagakalvi.blogspot.com/2011/10/blog-post_04.html

Post a Comment